ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு சேலை
கட்டிவருகையில்
எனக்காக
ஒரு கவிதையையும்
கூட்டி வருபவள்
நீ
நீண்ட வரிசையில்
மிகப்பின்னால் நிற்கையில்
காத்திருப்பின் வலியை
நீடிக்கச் சொல்கிறது
மனசு...
எனக்கு முன்னால்
நீ
வெந்துதணியும்
வெப்பக்காட்டில்
முக்கி முணகித்திரிந்த
காதல்பறவை நான்
வாரிக்கொண்ட
வேடந்தாங்கல்
நீ
இருண்ட தேசத்தில்
எரியும்
ஒற்றை மெழுகுவர்த்தியாய்
எனக்கென எப்போதும்
நீ
--நாவிஷ் செந்தில்குமார்
Monday, March 2, 2009
நீ
Labels:
கவிதை,
கவிதைகள்,
காதல் கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இரண்டாவது நீ-
சில நினைவுகளை கொண்டு வந்தது...
நல்லாருக்கு...
///நீண்ட வரிசையில்
மிகப்பின்னால் நிற்கையில்
காத்திருப்பின் வலியை
நீடிக்கச் சொல்கிறது
மனசு...
எனக்கு முன்னால்
நீ///
ரொம்ப நல்லாருக்கு இந்த வரிகள்! நாவிஷ்! வாழ்த்துக்கள்!
///தமிழன்-கறுப்பி... கூறியது...
இரண்டாவது நீ-
சில நினைவுகளை கொண்டு வந்தது...
///
நன்றி தமிழன்-கறுப்பி
////ஷீ-நிசி கூறியது...
ரொம்ப நல்லாருக்கு இந்த வரிகள்! நாவிஷ்! வாழ்த்துக்கள்!
////
நன்றி கவிஞரே...
Post a Comment