உன் கண்கள் நடத்தும்
நூலகத்தில்
எனக்களிக்கப்பட்ட
"முதன்மை வாசகன்"
முத்திரையை அழி!
என் தேகத்தின்
பாகங்கள் அனைத்திலும்
உன் தீண்டாமை என்னும்
பாவச்செயல் போக்கு!
ஒவ்வொரு செல்லிலும்
உறைந்து கிடக்கும்
உன் நினைவுகளை
உதடுகளால்
உரசி உரசியே எடு!
காலையில் தினமும்
தலைவாரும் போதெல்லாம்
உன் கூந்தல்வரை நீளும்
என் விரல்கள்
நாளையும் தேடுமே
அவைகளை இப்போதே
வெட்டியெறி!
இனி நான் வீசியெறியும்
விரக்திப் பெருமூச்சில்
உலகமே உருகுமே
அதற்கு ஒரு
மாற்று வழி அறி!
மொத்தத்தில்
உனது பிரிதலும்
எனது மறைதலும்
ஒன்றே எனக் கொள்.
– நாவிஷ் செந்தில்குமார்
Wednesday, March 4, 2009
பிரிதலுக்கு முன்…
Labels:
கவிதை,
கவிதைகள்,
காதல் கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Arumai...
- G A N E S H
தங்களின் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு நன்றி கணேஷ்.
//மொத்தத்தில்
உனது பிரிதலும்
எனது மறைதலும்
ஒன்றே எனக் கொள்.//
ரொம்ப அழகு....
அன்புடன் அருணா
பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி அருணா.
தொடர்ந்து வாசியுங்கள்...
\\மொத்தத்தில்
உனது பிரிதலும்
எனது மறைதலும்
ஒன்றே எனக் கொள்.\\
இந்த வரிகள் அருமை:)
//
//
\\மொத்தத்தில்
உனது பிரிதலும்
எனது மறைதலும்
ஒன்றே எனக் கொள்.\\
இந்த வரிகள் அருமை:)
//
//
பின்னூட்டத்திற்கு நன்றி திவ்யா!
Post a Comment