Saturday, June 26, 2010

விளையாட்டுப் பொம்மை

வெயில் நாளில்
குடை எடுத்துவர
மறந்துபோனாய்...
ஒரு மழை நாளை
ஊருக்கே பரிசாகத் தந்தது
இயற்கை.
00
கடற்கரையில் அலைபிடித்து
நீ விளையாட
என் மனம் நுரைதள்ளுகிறது...
நீ நுரையள்ளி விளையாடத்
தொடங்க
என் மனதில் காதல்
அலையடிக்கத் தொடங்குகிறது!
00
உன் வெட்கம் உறங்கும்
தருணம் பார்த்து
இரவெல்லாம்
விழித்துக்கொண்டிருக்கிறது
உனக்கான
ஒரு முத்தம்.
00
நான் வெறும் அம்பு
என்னை எய்தது
காதலே...
ஆனாலும் பரவாயில்லை
என்ன செய்வதானாலும்
என்னையே செய்.
00
நீ விளையாடி விளையாடியே
உடைந்து போன
விளையாட்டுப் பொம்மை
என்னை ஒருநாள்
வீசியெறிந்து விடுகிறாய்...
உண்மையில் நான்
உடைந்து போனது
தூக்கியெறியப்பட்ட
நாளில்தான் தெரியுமா?

5 comments:

Swengnr said...

கவிதை அருமை! பகிர்வுக்கு நன்றி!

சி.பி.செந்தில்குமார் said...

விகடனில் கலக்கியவரே,வாங்க மாப்ளை வாங்க.கவிதையும் சூப்பர்,லே அவுட்டும் சூப்பர்

Katz said...

2,3,4 கவிதைகள் ரசித்தேன்

Senthilkumar said...

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சாப்ட்வேர் எஞ்சினியர், செந்தில்குமார் மற்றும் வழிப்போக்கன்.

மதுரக்காரி said...

நான் வெறும் அம்பு
என்னை எய்தது
காதலே...
ஆனாலும் பரவாயில்லை
என்ன செய்வதானாலும்
என்னையே செய்..///////////

kalakals.... :)