பேருந்து நடத்துனர் கேட்ட
ஐம்பது பைசா சில்லறை
“இல்லை” என்று சொல்கையில்
உன் உதடுகள் சுழித்து
உதிர்க்கிறாய்
கோடானு கோடி கொடுத்தாலும்
கிடைக்காத அழகை...
நீ பேசிய
வார்த்தைகளைக் காட்டிலும்
பேசாத வார்த்தைகள்தான்
மிகப்பெரிய பாக்கியசாலிகள்!
உனக்குள்ளேயே இன்னும்
புதைந்து கிடக்கின்றனவே!
என்னதான்
எனக்காகவும் நீயே
சாப்பிடுவதாகச் சொன்னாலும்
உனக்காகக் கொஞ்சம்
சாப்பிடச் சொல்லி
ஒவ்வொரு வேளையும்
பசிக்கிறது எனக்கு!
கொடுத்ததைக் கேட்கும்
குறுகிய புத்தி
உனக்கும் எனக்கும்
முத்த விசயத்தில்...
வாரிவாரிக் கொடுத்தாலும்
தீர்ந்தபாடில்லை
நம் இதழ்கள் வழங்கிய
முத்தக்கடன்!
--நாவிஷ் செந்தில்குமார்
Monday, April 20, 2009
என்னவளே!
Labels:
கவிதை,
கவிதைகள்,
காதல் கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஹே... நாவிஷ்! உங்களின் எல்லா கவிதையும் மிக அருமை. wow really superb lines, sorry i find difficulty in typing Tamil pa. sure i will visit regularly ven ever i loggin. Hats off frnd.
கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க..
//நீ பேசிய
வார்த்தைகளைக் காட்டிலும்
பேசாத வார்த்தைகள்தான்
மிகப்பெரிய பாக்கியசாலிகள்!
உனக்குள்ளேயே இன்னும்
புதைந்து கிடக்கின்றனவே!
//
அருமை.. ரசித்தேன்
Post a Comment