படங்கள் இல்லாத
பாடப்புத்தகத்தில்
நீ வந்து அமர்ந்து
கொள்வதால்
புரட்டப் புரட்ட
படப்புத்தகமாகவே
காட்சியளிக்கிறது!
வரியே இன்றி
தலைப்பே கவிதையாய்
எழுதச் சொன்னார்கள்
உன் பெயரை
எழுதிவிட்டேன்!
(முக)வரிகளே இல்லாத
கவிதைதானே நீ...
எனது கவிதையின்
உயிரோட்டம்
பல பக்க வரிகளில் இல்லை
உனது ஒற்றைவரிப்
பின்னூட்டத்தில்தான்
உள்ளது!
"என் உடையில்
எந்த வண்ணம் பிடிக்கும்?"
என்று கேட்கிறாய்
என்ன உடையானாலும்
உன் எண்ண உடை
வண்ணமாம் வெண்மைதான்
எனக்குப் பிடிக்கும்!
உனக்குப் பிடிக்காது
என்பதை
எனக்குப் பிடிக்கும்படி
சொல்வதால்தான்
நமக்குள் பிடித்துப்போனது!
--நாவிஷ் செந்தில்குமார்
Monday, April 6, 2009
இது ஒரு கவிதைக்கான கவிதை!
Labels:
கவிதை,
கவிதைகள்,
காதல் கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
//படங்கள் இல்லாத
பாடப்புத்தகத்தில்
நீ வந்து அமர்ந்து
கொள்வதால்
புரட்டப் புரட்ட
படப்புத்தகமாகவே
காட்சியளிக்கிறது!//
காதல் நிரம்பிய வரிகள்... :)
//படங்கள் இல்லாத
பாடப்புத்தகத்தில்
நீ வந்து அமர்ந்து
கொள்வதால்
புரட்டப் புரட்ட
படப்புத்தகமாகவே
காட்சியளிக்கிறது!//
காதல் நிரம்பிய வரிகள்... :)
//
//
தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி! பிரேம்குமார்.
kavithai super anna.
//dharshini கூறியது...
kavithai super anna.
//
Romba nanri thankai...
"என் உடையில்
எந்த வண்ணம் பிடிக்கும்?"
என்று கேட்கிறாய்
என்ன உடையானாலும்
உன் எண்ண உடை
வண்ணமாம் வெண்மைதான்
எனக்குப் பிடிக்கும்!////
அட்டகாசமான வரிகள் நாவிஷ்!
வாழ்த்துக்கள்!
///ஷீ-நிசி சொன்னது…
"என் உடையில்
எந்த வண்ணம் பிடிக்கும்?"
என்று கேட்கிறாய்
என்ன உடையானாலும்
உன் எண்ண உடை
வண்ணமாம் வெண்மைதான்
எனக்குப் பிடிக்கும்!////
அட்டகாசமான வரிகள் நாவிஷ்!
வாழ்த்துக்கள்!
//
//
நன்றி ஷீ-நிசி!
\\"என் உடையில்
எந்த வண்ணம் பிடிக்கும்?"
என்று கேட்கிறாய்
என்ன உடையானாலும்
உன் எண்ண உடை
வண்ணமாம் வெண்மைதான்
எனக்குப் பிடிக்கும்!\\
beautiful lines:))
kavithai romba romba nallaruku:)
//
beautiful lines:))
kavithai romba romba nallaruku:)
//
ரொம்ப நன்றி திவ்யா... :)
"உனக்குப் பிடிக்காது
என்பதை
எனக்குப் பிடிக்கும்படி
சொல்வதால்தான்
நமக்குள் பிடித்துப்போனது!"
மொத்தத்தில் அருமை செந்தில்.
காக்க கக்க படத்துல, சூர்யா சொல்லுவார்ல, "என்ன அவளுக்கு புடிகல, அது எனக்கு புடிச்சிருந்தது ,
அதுமாரி இதுவும் சூப்பர்.
Post a Comment