ஊருக்குப் போகும்போது
உனது நகவெட்டியை
மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டாய்
பார்க்கும்போதெல்லாம்
என் மனதை வெட்டிக்கொண்டிருக்கிறது
அது
00
ஏனோதானோவென
எழுதிக் கொண்டிருக்கிறேன்
கவிதைகளை…
எப்படியும் நீ வாசிக்கையில்
அழகாகிவிடும் என்ற
நம்பிக்கையில்
00
எல்லோரும் அணிகலன்களை
சேகரித்து வைப்பது போல
உனக்காக
கவிதைகளை எழுதி வைத்திருக்கிறேன்
வா வந்து
அணிந்துகொள்!
00
நீ சேலையில் இருக்கிற
புகைப்படம் அனுப்பிய
மின்னஞ்சலில்தான்
தேவதையில் இருக்கிற
புகைப்படத்தையும்
சேலை எனக்கு அனுப்பியது!
00
நண்பர்களிடம்
உன்னை மறந்துவிட்டதாகச்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
உன் நினைவு
வரும்போதெல்லாம்...
00
மற்றவர்களுக்கு எப்படியோ...
என் திருமணம்
நீ என்ற
சொர்க்கத்தால்தான்
நிச்சயிக்கப்படும்!
--நாவிஷ் செந்தில்குமார்
Friday, August 13, 2010
மனவெட்டி
Labels:
கவிதை,
கவிதைகள்,
காதல் கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
தபுசங்கரின் டச் உங்க கவிதைகளில் தெரியுது.தொடர்ந்து உங்கலை ஆ.வி ல பார்த்துட்டு வர்றேன்,வாழ்த்துக்கள்
அன்பின் நண்பா...
வணக்கம்.
உங்கள் வலைப்பூ குறித்த பகிர்வை எனது இன்றைய வலைச்சரம் பதிவில் தொடுத்து இருக்கிறேன்.
நீங்கள் வாசிக்க வலைச்சரம்(http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_18.html) செல்லவும்.
நன்றி.
நட்புடன்
சே.குமார்
//நண்பர்களிடம்
உன்னை மறந்துவிட்டதாகச்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
உன் நினைவு
வரும்போதெல்லாம்...//
true lines..........
நண்பர்களிடம்
உன்னை மறந்துவிட்டதாகச்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
உன் நினைவு
வரும்போதெல்லாம்...//
True lines
Post a Comment