விரல்களைத் தாண்டி
வளர்ந்துவிட்ட நகம்
உன் நினைவுகள்
வெட்டமுடிகிறதே தவிர
வேரோடு களைய நினைத்தால்
உயிர் போகிறது
வலி!
00
மின்காந்த அலைகளுமிழும்
அவளினிரு கண்களைத்
தவிர்க்க வேண்டி
தலை கவிழ்த்தேன்...
பாதங்களில்
பத்துக்கண்கள் கொண்டு
வெறிக்கிறாள்.
00
நீ நடந்து செல்லும்
பாதையெங்கும்
ரங்கோலியொன்றை
வாங்கிக்கொள்கிறது
இந்தப் பூமி
00
உன்னிடம் மட்டுமே சொல்ல
என்னிடம்
ஒரு வார்த்தையுண்டு
உன்னோடு வாழ மட்டுமே
என்னிடம்
ஒரு வாழ்க்கையுண்டு
00
எனக்கு இனி நான்
வேண்டாம்…
நீ மட்டுமே போதும்.
00
நீ
நான்
நம்மிடையே காதல்.
பரிமாறிக்கொண்ட
பரிசுப்பொருட்களைத்
திரும்பக்கொடுத்துவிட்டுப்
பிரிந்தோம்...
அந்த முத்தங்களை
என்ன செய்யலாம்?
-நாவிஷ் செந்தில்குமார்.
Friday, July 2, 2010
பத்துக்கண்கள்
Labels:
கவிதை,
கவிதைகள்,
காதல் கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
முதல் 3, கடைசி 1 கவிதைகள் ரொம்ப நல்லாருக்கு நாவிஷ்.
4 மற்றும் 5வது கவிதை தவிர மற்றவை அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கின்றன:-)
நீ
நான்
நம்மிடையே காதல்.
பரிமாறிக்கொண்ட
பரிசுப்பொருட்களைத்
திரும்பக்கொடுத்துவிட்டுப்
பிரிந்தோம்...
அந்த முத்தங்களை
என்ன செய்யலாம்?/////////
sooper..... :)
Post a Comment