நான் பார்க்கக்கடவா
உன் பருவத்தின்
வளைவு நெளிவுகளில்
எங்கேனும்
ஒளிந்திருக்கக் கூடுமோ
இந்த உலகத்தின்
மிகச்சிறந்த
காதல் கவிதை?
மொட்டவிழும்
முன்காலைப் பொழுதில்
முழங்கால் மடித்துக்
கோலமிடும்
உனைக் கண்டதும்
கட்டவிழ்த்துக் கொண்ட
காதலை
எங்கொளித்துக்கொள்ளும்
என் சிறுபிள்ளை மனசு?
கடல் நீர் இழுத்து
அமுதாய்த் திரித்து
பெய்கின்ற மழையை
கையடக்கக் குடையால்
தடுத்து விடுகின்ற நீ
எதைக்கொண்டு தடுப்பாய்
என்னால் பெய்யும்
காதல் மழையை?
வேலைக்குச்செல்லும் எனக்கு
வினையூக்கியாய்
இதழ் மீது தினமும் நீ
இடும் முத்தத்திலிருந்து
எந்தப் பறவையால்
பிரித்தறியமுடியும்
காதலையும் காமத்தையும்?
--நாவிஷ் செந்தில்குமார்
Saturday, February 21, 2009
வினாக்கள் சில...
Labels:
கவிதை,
கவிதைகள்,
காதல் கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இதுவும் ஏதோ 'கேள்வி-பதில்' னு நினைச்சிட்டேன்.
உங்க வினாக்களும் நல்லாத்தான் இருந்தன. 'வினா' என்கிற சொல்லை பயன்படுத்தியதற்கும் வாழ்த்துக்கள்.
Dear Mr. Navish,
I think it's a fantastic one. What an imagination man. I was really impressed with the way you handled the words and the sentences. Keep giving poems like this.
Best Regards,
Mathan.
Dear Mr. Navish,
/////............
I think it's a fantastic one. What an imagination man. I was really impressed with the way you handled the words and the sentences. Keep giving poems like this.
Best Regards,
Mathan.
............./////
உங்கள் கருத்துக்கு நன்றி மதன்.
நிச்சமாகக் கொடுக்கிறேன்.
///ஊர் சுற்றி கூறியது...
இதுவும் ஏதோ 'கேள்வி-பதில்' னு நினைச்சிட்டேன்.
உங்க வினாக்களும் நல்லாத்தான் இருந்தன. 'வினா' என்கிற சொல்லை பயன்படுத்தியதற்கும் வாழ்த்துக்கள்.
//////
நன்றி தோழரே...
//// தமிழன்-கறுப்பி... கூறியது...
:)
////
:)
நன்றி
Post a Comment